டாக்டர். சுந்தர் பாலசுப்ரமணியன் செல் உயிரியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பிராண சயன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். அவர் மனித உயிரியலில் யோக சுவாசத்தின் தாக்கம் குறித்த விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளார், மேலும் அவர் ஒரு சான்றளிக்கப்பட்ட யோக சிகிச்சையாளர ஆவார். டாக்டர் சுந்தர் அவரது முன்னோடி ஆய்வுகளின் வழியாக பிராணயாம மூச்சுப்பயிற்சிகளின் நன்மைகளைக் குறித்த மிகமுக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். பிராணயாம வகுப்புகளின் வழியாக மற்றவர்களுக்கு உதவ அவரது கண்டுபிடிப்புகளைப் பகிந்துகொள்ளவும் அவற்றின் பயன்களை பகிர்ந்துகொள்ளவும் செய்கிறார்.
டாக்டர் சுந்தர் தமிழ்நாட்டில் சித்த மருத்துவத்தை மரபாக கொண்ட ஒரு குடும்பத்தில் வளர்ந்தவர. அவர் மிக இளம் வயதிலேயே யோகாசனப் பயிற்சிகள், பிராணயாமம் தியானம் மற்றும் பாடல் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். இப்பயிற்சிகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் தனது இந்த மரபான ஞானத்தையும் அவரது அறிவியல் ஆய்வுமுறைகளையும் இப்போது ஒன்றிணைத்துள்ளார்.
டாக்டர். சுந்தர் சர்வதேச யோக சிகிச்சையாளர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த யோக ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர்; அவர் TEDx சார்லஸ்டன் 2015 இல் ஒரு பேச்சாளராகவும் இருந்தார். டாக்டர் சுந்தர் இந்த போதனைகளை உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கிடைக்கச் செய்வதில் ஆர்வமாக உள்ளார்.
இவ்வாய்வில் பங்கேற்க விழைபவர்கள் ஆய்வுக்குழுவுடன் நேரடியாகச் சந்தித்து பயிற்சிகளைப் பற்றியும், செயலியைப்பற்றியும் அறிந்துகொள்ளலாம். மெய்நிகர் சந்திப்புகளாக இவை நிகழலாம். 10 நிமிடங்கள் நீளக்கூடிய ஒரு பயிற்சியை ஒவ்வொருநாளும் 3 முறை என 12 வாரங்களுக்கு செய்வதே பங்களிப்பின் நோக்கம். ஆனால் பங்கேற்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப கூடுதலாகவோ குறைவாகவோ கூட பயிற்சிகளைச் செய்யலாம். பங்கேற்பவர்களுக்கு அக்குழுவில் உள்ள மற்ற பங்கேற்பாளர்கள் குறித்த தகவல்களும் வழங்கப்படுவதால், அக்குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ பயிற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுவார்கள். இவ்வாய்வில் பங்கேற்க விழைபவர்கள் அமெரிக்காவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.