அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிராணயாமம் செய்வதற்கு விரிப்பு தேவையா?

இல்லை. பிராணயாமம் செய்வதற்கு விரிப்பு தேவை இல்லை. எந்தக் குறிப்பிட்ட  அமரும் முறைகள், அல்லது சிறப்பான இடவசதி  கூடத் தேவையில்லை. எங்கும் எப்படி உட்கார்ந்திருந்தாலும் பிராணயாமத்தைச் செய்யலாம்

நாற்காலி அல்லது இருக்கையில் அமர்ந்து பிராணயாமம் செய்யலாமா?

வசதியாக அமரமுடிந்தால் போதும். தாராளமாக அப்படி அமர்ந்து பிராணயாமத்தைச் செய்யலாம். பிராணயாமப் பயிற்சியைப்பொருத்து, முதுகை நேராக வைத்திருப்பது நல்ல பயனளிக்கும். எந்தக் குறிப்பிட்ட பிராணயாமப் பயிற்சிக்கும் உங்கள் பயிற்றுநரிடம் அதற்கான சரியான தோரணை, உங்கள் உடல்நிலை குறித்து ஆலோசிக்கவும்.

எப்படியான உடைகளை பிராணயாமப் பயிற்சியின் போது அணிய வேண்டும்?

வசதியான எந்த உடையும் நல்லது! ஆடை உங்கள் ஆழ்ந்த சுவாசத்திற்கு தடையாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் அணிவதுஆழ்ந்த மூச்சுப் பயிற்சியின் போது உங்கள் வயிற்று இயக்கத்தைத் தடுக்கக் கூடாது.

பிராணயாமப் பயிற்சியின் போது உடல் தோரணைகளைச் செய்யவேண்டுமா?

உடற்தோரணைகள் பெரிதும் தேவையற்றது. பெரும்பாலான பிராணயாமா நுட்பங்கள் எந்த தோரணையிலும் பயிற்சி செய்ய எளிதானவை. இருப்பினும், சில வகையான மூச்சுப் பயிற்சிகள் செய்வதற்கு சில தோரணைகள் சிறந்தவையாக இருக்கும்.

பிராணாயாமமும் யோக சுவாசமும் ஒன்றா?

ஆம், அவை பெயர்கள்தான்.  ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தலாம். இதை மூச்சுப்பயிற்சி அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சுவாசம் என்றும் அழைக்கலாம்.

பிராணயாமா பயிற்சி செய்வதற்கு ஏதேனும் உணவு கட்டுப்பாடுகள் உள்ளதா?

இல்லை. பிராணயாமா பயிற்சி செய்வதற்கு குறிப்பிட்ட உணவுக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இருப்பினும், உணவுக்குப் பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரங்கள் கழித்தோ, உணவுக்கு  இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரங்களுக்கு  முன்போ பயிற்சி செய்வது சிறந்தது. வயிறு நிரம்பியிருப்பது சில மூச்சுப்பயிற்சிகளின் போது வசதிக்குறைவை ஏற்படுத்தும்.

உங்கள் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்க குறைந்தபட்ச வயது என்ன?

பல்வேறு பயனர் குழுக்களுக்காக பலவகைப்பட்ட பயிற்சி அமர்வுகளை பிராணாசயன்ஸ்  வடிவமைத்துள்ளது. குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களும் உள்ளன, மேலும் சில திட்டங்களுக்கு வயது வரம்புகள் இல்லை. இருப்பினும், வயதுவந்த பங்கேற்பாளர்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட திட்டங்களும் உள்ளன. ஒவ்வொரு திட்டத்தின் விவரங்களையும் அறிந்துகொள்ளவும். நீங்கள் ஒரு குழந்தைக்கு பயிற்சி அமர்வை ஏற்பாடு செய்ய விரும்பினால், எங்களைத் தொடர்பு கொள்ள தொடர்புப் பக்கத்தைப் பயன்படுத்தவும்.

முதியவர்கள் பிராணயாமம் செய்யலாமா?

ஆம். முதியவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிராணயாமப் பயிற்சிகள் உள்ளன. தென் கரோலினாவில் நினைவாற்றல் குறைபாடுகள் கொண்டவர்கள், முதியோர் இல்லங்களில் வசிப்போர் என பல முதியோருக்கும் நிதானமான மூச்சுப்பயிற்சிகளை நாங்கள் வடிவமைத்து வழங்குகிறோம். மேலும் டாக்டர் சுந்தர் முதியார்களிடம் இந்த நிதானமான யோகாசன மற்றும் மூச்சுப்பயிற்சிகளின் ஏற்படுத்தும் நல்விளைவுகள் குறித்து ஆய்வுகளைச் செய்கிறார். இந்த ஆய்வுகள் இந்தத் துறையில் நமது அறிவை மேம்படுத்த பெரிதும் உதவும்.

பிராணயாமம் கர்ப்பிணிகளுக்கு உகந்ததா?

கர்ப்பிணிப் பெண்கள் பிராணாயாமம் செய்யக் கூடாது என்ற பொதுவாக ஒரு தவறான கருத்து உள்ளது. பிராணயாமம் மன அழுத்தத்தைப் போக்கி கர்ப்ப காலத்தில் உற்சாகமாக உணர உதவுகிறது. பிராணாசயன்ஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட மூச்சுப்பயிற்சிகளை பிராணாசயன்ஸ் வழங்குகிறது. பிரசவத்திற்குப் பிறகான மனநிலையையும் பாலூட்டலையும் மேம்படுத்தவும்,மனநலம் தொடர்பான சவால்களைக் குறைக்கவும் பிராணயாமம்  உதவும். கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே சுவாசப் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவது பிரசவத்தின் அனைத்து நிலைகளிலும் விஷயங்களை எளிதாக்கும்.

நான் ஒரு அமர்வை தவறவிட்டால் என்ன செய்வது? பதிவு செய்யப்பட்ட பயிற்சி முறைகள் காணக்கிடைக்குமா?

நாம் அனைவரும் வெவ்வேறு நேர மண்டலங்களில் வெவ்வேறு வேலைத் திட்டங்களுடன் வாழ்கிறோம் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அதனால்தான் எங்கள் அமர்வுகள் அனைத்தையும் பதிவுசெய்து, பின்னர் நீங்கள் பார்க்கவும் பயிற்சி செய்யவும் அவற்றைக் கிடைக்கும்படி செய்கிறோம். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் ஒரு வீடியோ இணைப்பு அனுப்பப்பட்டு அது ஒரு வாரம் வரை காணக்கிடைக்கும். இந்த வீடியோக்கள் எங்கள் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு, சந்தாதாரர்களுக்குக் காணக் கிடைக்கும்.

பிராணசயின்ஸ் தற்போது வழங்கும் படிப்புகள் அல்லது அமர்வுகள் என்ன?

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் பட்டியலுக்கு எங்கள் நிகழ்வுகள் பக்கத்தைப் பார்க்கவும். அதிகாலை பிராணயாமம், வார இறுதி பிராணயாமத் தொடர்கள் மற்றும் பிராணயாம ஆசிரியர் பயிற்சி ஆகியவை எங்களின் தரப்படுத்தப்பட்ட பயிற்சிகளில் சில.

டாக்டர் சுந்தரிடமிருந்து நான் எனக்கான தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற முடியுமா?

ஆம், டாக்டர் சுந்தருடன் ஒருவருக்கான தனிப்பட்ட ஆலோசனைகள் கிடைக்கின்றன. இருப்பினும், தனிப்பட்ட அமர்வுகளுக்கு இடங்கள் குறைவானவையே. இந்த அமர்வுகள் ஏதேனும் சொந்த உடல் பிரச்சனைகள்/ உடல் தகுதிகள் அல்லது  உங்கள் பயிற்சிகள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள், கவலைகள், அச்சங்கள் குறித்து அவருடன் விவாதிக்க, திட்டமிட உங்களுக்கு உதவும். உங்கள் ஆலோசனைக்காக  திட்டமிட, Calendly வழிமுறைகளைப் பின்பற்றவும்: https://calendly.com/pranascience/30min

ஒரு நிகழ்வு அல்லது பட்டறைக்கு நான் எப்படி டாக்டர் சுந்தரை முன்பதிவு செய்வது?

ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் டாக்டர் சுந்தர் பேசுகிறார். அந்நிகழ்வுகள் பல வாரங்களுக்கு முன்பே திட்டமிடப்படுகின்றன. டாக்டர் சுந்தர் பங்குபெறும் உங்கள் நிகழ்வினைத் திட்டமிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். அப்பாயிண்ட்மெண்ட் படிவத்தை நிரப்பவும், 24 மணிநேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்வோம்.

போதை பழக்கத்தை விட்டுவிட பிராணயாமம் எனக்கு உதவுமா?

பல அடிமையாக்கும் நடத்தைகளுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமென நிரூபிக்கப்பட்டுள்ளது. சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான மதிப்புமிக்க கருவிகளாகும். தொன்மையான ஞானம், சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் இவை இரண்டின் அடிப்படையில், பிராணசயின்ஸ் அடிமைப்படுத்தும் பழக்கத்தை உடைக்க பிராணயாமத்தைப் பயன்படுத்துகிறது. பொதுவாக பிராணயாமம், வியத்தகு முறையில் மன இறுக்கத்தை தளரச்செய்யவும் பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவ்விரண்டும் இணைந்து போதை பழக்கத்தை விட்டு வெளியேற உதவுகிறது.

நான் பிராணயாமா பயிற்சி செய்யும் போது என்ன உயிர்வேதிப்பொருட்களை உற்பத்தி செய்கிறேன்?

நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு மற்றும் சுழற்சி மண்டலங்களுடன் தொடர்புடைய பல உயிர்வேதிப்பொருட்களை பிராணயாமம் தூண்டுகிறது என்பதை டாக்டர் சுந்தரின் அற்புதமான ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. இந்த உயிர்வேதிப்பொருட்கள் அந்த அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும். டாக்டர் சுந்தர் வெளியிட்ட கட்டுரைகள் மற்றும் அறிவியலை விளக்கும் பிற பிரபலமான கட்டுரைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன (ஆராய்ச்சி).

என் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பிராணயாமா நன்மை பயக்கிறதா?

ஆம்

டாக்டர் சுந்தர் எழுதிய புத்தகங்கள் யாவை?

டாக்டர் சுந்தர்,  மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழ்களில் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். முழுமையான பட்டியல் அவரது Google Scholar பக்கத்தில் உள்ளது (https://scholar.google.com/citations?hl=en&user=2E9w-LgAAAAJ&view_op=list_works&sortby=pubdate). டாக்டர் சுந்தரின் புத்தகங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் BOOKS பக்கத்தில் கிடைக்கும். இந்த புத்தகங்கள் அமேசான் மூலமாகவும் உலகம் முழுவதும் கிடைக்கின்றன.

ஒரு நாளில் எத்தனை முறை பிராணயாமா பயிற்சி செய்ய வேண்டும்?

பிராணயாமத்தின் வகையைப் பொறுத்து இது மாறும். உதாரணமாக, மெதுவான ஆழ்ந்த சுவாசப் பயிற்சியை ஒருவர் வசதியாக உணரும் வரை பயிற்சி செய்யலாம். எவ்வாறாயினும், கபாலபதி போன்ற பயிற்சிகளை சுருக்கமாக மட்டுமே பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறோம். அத்துடன் ஓய்வெடுப்பதற்கான இடைவெளிகளையும்  கணக்கில் கொள்ள வேண்டும், எடுத்துக்காட்டாக, இடையிடையே ஓய்வெடுத்துக்கொண்டு 10 நிமிடங்கள் வரை இப்பயிற்சிகளை ஒரு முறை செய்யலாம். இதுபோன்று மூன்று முறை ஒரு நாளில் செய்யலாம்.  பிராணயாமம் ஒரு தனிப்பட்ட அனுபவம், எனவே அது நபருக்கு நபர் மாறுபடும்.

ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் பிராணயாமப் பயிற்சி செய்ய வேண்டும்?

ஒருவர் ஒவ்வொரு நாளும் பிராணயாமா பயிற்சி செய்ய வேண்டும். அதுவே உத்தமம்.  இந்த நெருக்கடி மிக்க வாழ்க்கையில் தினசரி பயிற்சியைத் தொடர்வதற்கான வழிகளைக் கண்டறிய எங்கள் திட்டங்கள் உங்களுக்கு உதவும்.

என் தியானத்திற்கு பிராணயாமா உதவுமா?

ஆம்! ஒருவர் மனோமயம் எனப்படுகிற மனவெளியை அடைவதற்கு முன் அவரது உயிர் ஆற்றல் (பிராணா) வெளி ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.  பிராணயாம முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உயிராற்றல் வெளியானது சீரமைக்கப்படுகிறது. சித்த பாரம்பரியத்தில், தியானம் மற்றும் சுய-உணர்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இறுதிக் கருவியாக பிராணயாமம் கருதப்படுகிறது.

பிராணாயாமத்திற்கு முன் நான் ஆசனம் செய்ய வேண்டுமா?

உங்கள் உடல் திறனுக்கு ஏற்ப ஆசனப் பயிற்சிகளைச் செய்யலாம். இந்த பயிற்சிகளை நீங்கள் தரையில் அல்லது நாற்காலியில் இருந்தே செய்யலாம். அவ்வாசனப்பயிற்சியானது உங்கள் சுவாசத்தை மேம்படுத்துவதோடு, பிராணயாமத்துக்குத் தயாராவதற்கும் உதவும்; இருப்பினும், நீங்கள் ஆசனங்களைச் செய்ய முடியாவிட்டாலும்,  பிராணயாமத்தை தாராளமாகப் பயிற்சி செய்யலாம்.